பிப்ரவரி 08, சென்னை (Chennai): இந்த உலகத்திலேயே அழகானது என்றால் அது காதல் (Love) தான். ஒரு மனிதனுக்குள் காதல் வந்தால் எல்லாமே அழகாக தெரியும். உண்மையில் அதைவிட அழகு என்ன இருக்கு..!
இப்படிப்பட்ட காதலை கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த ஒரு நாள் மட்டும் இல்லை, அந்த வாரம் முழுவதுமே காதல் வாரமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று ரோஸ் தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று ப்ரோபோஸ் தினம் (Propose Day) கொண்டாடப்படுகிறது.
இன்றைய நாள் காதல் தின வாரத்தில் தங்களுக்கு பிடித்தவருக்கு காதலை வெளிப்படுத்தும் நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நீங்கள் உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு சென்று ப்ரோபோஸ் செய்யலாம். Dead Cockroach Found In Food: ரயில் உணவில் கரப்பான்பூச்சி... வந்தே பாரத் ரயில் பயணி அதிர்ச்சி..!
ஆனால் அதைவிட பெரிய கஷ்டம் எதும் இந்த உலகில் இல்லை. கை, கால் எல்லாம் உதற ஆரம்பிக்கும். எப்படித்தான் சொல்வது என்று இதயம் பதைபதைக்கும்.. ஒரே டென்ஷனா அங்கும் இங்கும் நடக்க வைக்கும்.. உங்களைப் பார்க்கும் எல்லோரும் கிண்டல் செய்வார்கள்.. இதெல்லாம் தாண்டி ப்ரோபோஸ் செய்யலாம் என்று நினைத்தால் ரிஜெக்ட் ஆகி விடுமோ என்று பயம் வரும்.. அப்படிப்பட்ட உங்களுக்காக தான் சில டிப்ஸ்..
எல்லோரும் பொதுவாக பார்ட்னரிடம் கேள்விகளை கேட்பார்கள். என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? காலம் முழுவதும் என்னுடன் வருவீர்களா? எனது துணையாக இருப்பீர்களா? இப்படி தான் எல்லோரும் கேட்பார்கள். ஆனால் எப்போதும் காதலைப் பற்றி கேள்வி எழுப்புவதற்கு முன், உங்களிடம் இருக்கக் கூடிய காதலை அவர்களிடம் கூறுங்கள். இருவரும் இணைந்து என்னவெல்லாம் வாழ்வில் செய்ய விரும்புகிறீர்கள் என்பதனை கோர்வையாக எடுத்து சொல்லுங்கள். இதுவே உங்கள் பார்ட்னருக்கு உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். அதே நேரம் நீங்கள் ஏற்கனவே காதலர்களாக இருந்தால் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த தினம் சிறப்பாக இருக்கும்.