New Married Couple Died in Accident: திருமணமான ஒரே வாரத்தில் நடந்த சோகம்; புதுமண தம்பதி, பெற்றோர் உட்பட 5 பேர் பரிதாப பலி..!

திருமலா ஸ்ரீவாரி கோவிலுக்கு திருமணம் முடிந்த சில நாட்களில் சென்ற தம்பதி, சாலை விபத்தில் அகால மரணமடைந்த சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

New Married Couple Bala Kiran & Kavya (Photo Credit: @Telugu Scribe X)

மார்ச் 06, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஆல்வள் பகுதியை சேர்ந்தவர் பால கிரண். அதே பகுதியில் வசித்து வாழ்ந்தவர் காவியா. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, மார்ச் 02ம் தேதி சாகிர்பேட்டை பகுதியில் வரவேற்பு நடைபெற்று முடிந்துள்ளது.

கோவிலுக்கு சென்ற தம்பதி: புதுமணத்தம்பதிகள் இருவரும் தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில், நேற்று புதுமணத்தம்பதிகளான காவியா - பால கிரண், அவரின் பெற்றோர் ரவிக்குமார் - லட்சுமி, இவர்களின் உறவினர் மகன் ஆகியோர் காரில் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருமலா ஸ்ரீவாரி கோவிலுக்கு செல்ல புறப்பட்டு பயணித்து இருக்கின்றனர். Thala Dhoni is Back: லியோ பாணியில் அட்டகாசமான தோற்றத்துடன் களமிறங்கிய தல தோனி.. அசத்தல் வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே..! லிங்க் உள்ளே.! 

Accident File Pic (Photo Credit: PTI)

5 பேர் பரிதாப பலி: இவர்களின் வாகனம் நந்தியாளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கி, காரில் பயணம் செய்த புதுமணத்தம்பதிகள் உட்பட 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

கண்ணீரில் உறவினர்கள்: விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுமண தம்பதிகள், அவரின் பெற்றோர், உறவினர் என ஐவர் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரின் உறவினர்கள், மருத்துவமனைக்கு வந்து கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.