MS Dhoni CSK (Photo Credit: @ChennaiIPL X)

மார்ச் 06, சென்னை (Sports News): இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோலாகலமாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் ஐபிஎல் போட்டிகள் (TATA IPL 2024), இம்மாதம் (மார்ச்) 22ம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. 10 அணிகள் மோதிக்கொள்ளும் இந்த ஆட்டத்தில், உலகளாவிய கிரிக்கெட் அணியை சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள் என்பதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல இன்ப அதிர்ச்சியை வழங்கும் போட்டியாக ஐ.பி.எல் தொடர் கவனிக்கப்படுகிறது.

முதல் ஆட்டத்தின் விபரம்: 2024 டாடா ஐ.பி.எல் போட்டியின் முதல் ஆட்டம் மார்ச் மாதம் 22ம் தேதி சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே (CSK Vs RCB) சென்னையில் உள்ள சேப்பாக்கம் மா. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது. இரவு 07:30 க்கு டாஸ் போடப்பட்டு, 08:00 மணிக்கு ஆட்டம் தொடங்கும் எனினும், நடப்பு தொடரின் முதல் ஆட்டம் என்பதால் முன்னதாகவே இசைக்கச்சேரி போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். Lightning Attack on Flight: தரையிறங்கிய விமானத்தை திடீரென தாக்கிய மின்னல்; நடுவானில் பதறவைக்கும் சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.! 

சென்னை அதிர நடக்கும் ஆட்டம்: சென்னை நகரமே குலுங்கக்குலுங்க நடைபெறவுள்ள சென்னை - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் வெற்றி ரசிகர்களால் பெரிதளவு எதிர்பார்க்கப்படும் என்பதால், இந்த ஆட்டம் மறக்க முடியாத ஒன்றாகவும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு அமையும். சொந்த மண்ணில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியும், சென்னை மண்ணில் வெற்றிபெற்று பெங்களூர் கொடியை நாட்டும் முனைப்புடன் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதும்.

சென்னைக்கு வரும் வீரர்கள்: தற்போதைய நிலவரப்படி, முதல் 21 போட்டிகளுக்கு மட்டுமே பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 2024 மக்களவை பொதுத்தேர்தல் இருப்பதால், சில அணிகளுக்கு இடையேயான விளையாட்டு தேதிகளில் மாற்றம் இருக்கும். சென்னை மற்றும் பெங்களூர் அணியின் வீரர்கள், மைதானத்தில் பயிற்சிபெற்ற முன்னதாகவே தமிழகம் வந்தடைவதும் வழக்கம் என்பதால், அவர்களின் வருகையை எதிர்பார்த்து பலரும் காத்திருக்கின்றனர்.

லியோ பாணியில் தல தோனி: இந்நிலையில், கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரர் தல தோனி, தான் மீண்டும் பழைய பாணியில் வந்துள்ளதை உறுதி செய்யும் பொருட்டு, தனது அட்டகாசமான தோற்றத்துடன் சென்னை வந்துள்ளார். அவரின் வருகையை கொண்டாடும் விதமாக, சென்னை சூப்பர்கிங்ஸ் நிர்வாகத்தினர், தங்களின் எக்ஸ் (ட்விட்டர்) லியோ படத்தின் காட்சிகளை மறுத்தயாரிப்பு செய்து வெளியிட்டு இருக்கின்றனர். இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.