Special Bus for Weekend Days: வார இறுதி விடுமுறை எதிரொலி; வெளியூர் பயணிகளுக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

வெள்ளி, சனிக்கிழமைகளில் சொந்த ஊர் சென்று திரும்புவோரின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SETC Bus (Photo Credit: @Sriramrpckanna1 X)

ஜூன் 21, சென்னை (Chennai): சென்னை, கோவை, திருச்சி, பெங்களூர் போன்ற வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பணியாற்றி வருவோர் வார இறுதி விடுமுறை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது வழக்கம். அந்த வகையில், வெள்ளிக்கிழமையான இன்று பெருநகரங்களில் பணியாற்றி வருவார் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, இன்று கூடுதலாக 600 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 3 children were Orphaned in Kallakurichi: போதைக்கு அடிமையான தாய்-தந்தையை ஒருசேர இழந்து தவிக்கும் பிஞ்சுகள்; கள்ளக்குறிச்சி சோகத்தில் பெரும்சோகம்.! 

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு:

அதேபோல, நாளைய தினத்தில் 410 சிறப்பு பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இன்று 55 பேருந்துகளும், நாளை 80 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. அதேபோல, பெங்களூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து பிற நகரங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊருக்கு செல்வோர் சிரமம் இன்றி பயணத்தை மேற்கொள்ளவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புபவர்கள் வசதிக்காக மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அந்தந்த பகுதிகளில் தொலைதூர பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கூடுதல் பேருந்துகள் இயக்கவும் மண்டல வாரியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.