HC On Working Wife and Low Maintenance: மனைவி வேலைக்கு சென்றாலும் ஜீவனாம்ச தொகை குறைக்கப்படாது - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! காரணம் இதோ.!
கணவர் தான் வழங்கும் ஜீவனாம்ச தொகையை ரூ.500 ஆக மாற்றி அறிவிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், தனது அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
செப்டம்பர் 27, புதுடெல்லி (Delhi High Court): டெல்லியை சேர்ந்த தம்பதிகள் திருமணம் செய்து சேர்ந்து வாழ்ந்த நிலையில், இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இருவருக்கும் வாழ்க்கை குழந்தையுடன் நன்றாக பயணித்துக்கொண்டு இருந்தது.
இந்நிலையில், தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் ஒருவரையொருவர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் பெண் தனியே தனது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மாதம் ஜீவனாம்சம் மற்றும் குழந்தை பராமரிப்பு தொகையாக, கணவரின் வருமானத்தை கணக்கில் கொண்டு ரூ.11,000 வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாதம் ரூ.3000 குழந்தைக்கான பராமரிப்பு தொகை, ரூ.8000 பிரிந்த மனைவிக்கு ஜீவனாம்ச தொகையாக வழங்கப்பட்டு வந்துள்ளது. தனியாக குழந்தையுடன் இருந்த பெண்மணி சுயதொழில் செய்து முன்னேறி இருக்கிறார். மனைவியை பிரிந்த கணவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. EcoMap Technologies Founder Dead: எகோமேப் டெக்னலாஜி நிறுவனரான 26 வயது இளம் பெண் தொழிலதிபர் மர்ம மரணம்; வீட்டில் சடலமாக மீட்பு.!
கொரோனா வைரஸ் தூக்கத்தின்போது மிகக்கடுமையான பிரச்சனையை எதிர்கொண்டு, தற்போது ஓயாத உழைப்பாளியாக கணவர் மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுயதொழில் செய்த பெண்மணி மேல்நோக்கி பயணித்து வருகிறார்.
இதனிடையே, கணவர் தான் வழங்கும் ஜீவனாம்ச தொகையை ரூ.500 ஆக மாற்றி அறிவிக்க வேண்டும். கொரோனா காரணமாக நான் தொழில் விஷயத்தில் நஷ்டப்பட்டுவிட்டேன். மனைவியும் சம்பாதிப்பதால் அவர்களுக்கு வழங்கும் ஜீவனாம்ச, பராமரிப்பு தொகையை குறைத்து உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், இன்று இறுதி தீர்ப்பு வழங்கினர். அதன்படி, கணவரை முறையீடு மனு தள்ளுபடி செய்து அறிவிக்கப்பட்டது. அவர் வழங்கிய பராமரிப்பு தொகைகளை அப்படி வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், மனைவி சம்பாதிக்க தொடங்கிவிட்டார் என்றால், அது பொருளாதார தேவை கருதியே தவிர்த்து தனித்தனி வருமானத்திற்கு அல்ல.
நிதி நெருக்கடி காரணமாக மனைவி தனக்கும் - குழந்தைக்கும் அன்றாடச் செலவை ஈடுகட்ட வேலை செய்யத் தொடங்கினால், அது கணவரிடம் இருந்து வரவேண்டிய பராமரிப்பு தொகையை குறைக்க காரணமாக அமையாது என தெரிவித்தது.