அக்டோபர் 13, கரூர் (Karur News): கரூர் மாநகரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரண சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கூட்ட நெரிசலில் குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற நபர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற விசாரணை:
அதன்படி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்காத தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேபோல கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் சிபிஐ விசாரணை நடத்த கோரி மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மனுதாக்கல் செய்தவர்கள் தரப்பில் நாங்கள் மனுதாக்கல் செய்யவில்லை என்றும், வழக்கறிஞர்கள் வேறுசில காரணங்களை கூறி கையெழுத்தை பெற்றதாகவும், இந்த மனுக்களுக்கும், தங்களுக்கும் எந்த சம்பவந்தமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. Gold Silver Rate: வாரத்தின் முதல்நாளே ரூ.5,000 உயர்வு.. அதிர்ச்சி தரும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் டாப்.!
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு:
இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான வாதங்களும் நடந்து வந்தது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சரியா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், பரபரப்பு திருப்பத்தை சந்தித்துள்ளது. அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் 41 உயிர்கள் பலியான கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து உண்மை வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.