செப்டம்பர் 27, நியூயார்க் (Technology News): அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட், பல்டிமோர் (Baltimore) பகுதியில் வசித்து வந்த 26 வயது இளம் தொழிலதிபர் பாவா லாபேரே (Pava LaPere). இவர் எகோமேப் டெக்னலாஜிஸ் (EcoMap Technologies) என்ற நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் Forbes நிறுவனத்தின் 30 வயதுக்குட்பட்ட சாதனையாளர்கள் பட்டியலில் முதல் 30 இடத்திற்குள் இடம்பெற்றவர் ஆவார். மிகவும் துடிப்பான, தெளிவான, இயற்கை மீது ஆர்வம் கொண்ட பெண்ணாகவும் பாவா இருந்து வந்துள்ளார். Tiger 3 on Deepawali 2023: தீபாவளி ரேஸில் இணைந்த சல்மான் கானின் டைகர் 3: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தமிழில் சல்மான் ட்விட்..! 

கடந்த சில மாதங்களாகவே இலாப நோக்கமற்ற முறையில் நிறுவனத்தை நடத்தி வந்த பாவா, கண்களில் கஷ்டப்படுவோரை பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு அவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரின் சடலம் காவல் துறையினரால் மீட்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் உடல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிறுவனரின் மறைவால் சோகத்தில் ஆழ்ந்துள்ள பணியாளர்கள், தொடர்ந்து அவரின் நற்செயலை செய்வார்கள் என்றும் எகோமேப் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை அவருக்கு அஞ்சலி செலுத்த அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.