Man Attempts to Light Cigarette Using Porsche’s Exhaust: கார் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில் சிகரெட் பற்ற வைக்க முயற்சி.. விபத்தில் முடிந்த ரீல் வீடியோ..!

போச்சே 718 கேமேன் காரின் பின்புறம் உள்ள எக்ஸாஸ்ட் பகுதியில் இருந்து வரும் நெருப்பு மூலம் சிகரெட் பற்ற வைக்க முயற்சி செய்த இளைஞர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

,ஆகஸ்ட் 15, புதுடெல்லி (New Delhi):இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) மோகம் இன்றைய 2கே கிட்ஸ்களை பாடாய் படுத்துகிறது.. வெறும் லைக் மற்றும் ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். யூடியூப்பில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம். பேஸ்புக்கில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு பாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரன் ஆக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள். அதேநேரம் சிலர் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட ஆரம்பித்து இன்று அதை முழுநேர வேலையாக செய்கிறார்கள். சிலரோ லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அந்த வகையில், இரண்டு இளைஞர்கள் போச்சே 718 கேமேன் காரின் பின்புறம் உள்ள எக்ஸாஸ்ட் பகுதியில் இருந்து வரும் நெருப்பு மூலம் சிகரெட் பற்ற வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் காரை ஸ்டார்ட் செய்தவுடன் இவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான தீவந்தது. இதனால் இளைஞர் ஒருவர் கை சுட்டது, அதில் அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஷாத் கான் என்ற பெயரில் உள்ள புரோபைலில் இருந்து வெளியாகி உள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற வீடியோவை பார்த்து நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் இப்படியான முயற்சியை செய்யாதீர்கள். இது ஆபத்தை ஏற்படுத்தும். Isro’s SSLV-D3 Mission: இஸ்ரோவின் புதிய சாதனை.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்..!

 

View this post on Instagram

 

A post shared by ASAD KHAN (@asad_khan165)

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)