ஆகஸ்ட் 16, ஸ்ரீஹரிகோட்டா (Andhra Pradesh): புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இ.ஓ.எஸ்-08 (EOS 08) எனும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் இஸ்ரோ ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து SSLV-D3/EOS-08 ராக்கெட் மூலம் விண்ணிற்கு ஏவப்பட்டது. மேலும் 17 நிமிடங்களுக்குப் பிறகு, 475 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. HUID Number: தங்கம் வாங்க போறீங்களா? அப்போ 6 இலக்க எண் இருக்கான்னு கண்டிப்பா செக் பண்ணிக்கோங்க..!
: இந்த செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இ.ஓ.ஐ.ஆர்.), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜ.என்.எஸ்.எஸ்-ஆர்) மற்றும் எஸ்.ஐ.சி. யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணிக்கும். இவை பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
#WATCH | ISRO (Indian Space Research Organisation) launches the third and final developmental flight of SSLV-D3/EOS-08 mission, from the Satish Dhawan Space Centre in Sriharikota, Andhra Pradesh.
(Video: ISRO/YouTube) pic.twitter.com/rV3tr9xj5F— ANI (@ANI) August 16, 2024