Cigarette Smoking Kills (Photo Credit: Pixabay)

டிசம்பர் 30, சென்னை (Health Tips): போதைப்பழக்கம் உடலுக்கு கேடு தரும் என கூப்பாடு போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அலட்சியம் மற்றும் அதீத தைரியம் போன்றவை இளம் தலைமுறையை (Cigarette Dangerous) அப்பழக்கத்திற்கு தொடர் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்குகிறது. இன்றளவில் சிகரெட் பயன்பாடு என்பது வெகுவாக அதிகரித்து இருக்கின்றன. நாம் ரோட்டில் நாடாகும் பொழுது பலர் சிகிரெட் பிடிப்பதை கடந்து தான் செல்வோம். இந்த பழக்கத்தால் ஏற்படும் உடல்நலக்குறைவு காரணமாக ஆண்டுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரணத்தை ஏற்படுத்தும் புகைப்பழக்கம்:

சிகிரெட்டில் உள்ள நிகோடின் உடல் பாதிப்புகளை வெகுவாக அதிகரிக்க செய்யும். இந்த தகவலை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது. சிகிரெட்டில் இருக்கும் நச்சுப்பொருட்கள், அபாயகரமான புற்றுநோய், இதயநோய், நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது ஆகும். இவை சிகிரெட் குடிப்போரின் மூச்சுக்குழாயில் ஊடுருவி நுரையீரலில் தாங்கும். நுரையீரலை விட்டு நீங்காது இருக்கும் நிகோடின் இருமல், மூச்சுத்திணறல், சோர்வு மற்றும் நெஞ்சு வலியை ஏற்படுத்தி மரணத்தை வழங்கும். Hormonal Imbalance: பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்றால் என்ன? அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.. விபரம் உள்ளே..!

இந்நிலையில் ஒரு சிகரெட் புகைத்தால் ஆண்களின் ஆயுட்காலம் 17 நிமிடங்களும், பெண்களின் ஆயுட்காலம் 22 நிமிடங்களும் குறைகிறது என்று லண்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்தால், சம்பந்தப்பட்ட புகைப்பிடிப்பவர்களின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் குறையும். எனவே புகைபிடிப்பதை கைவிடுவதால் உடனடி பயன்தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.