Vijay Condolences on Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரம்; நடிகர் & த.வெ.க தலைவர் இரங்கல்.!

அரசு நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக ஏற்பட்டுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், எதிர்காலத்தில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

TVK Vijay Condemn on Kallakurichi Liquor Case (Photo Credit: @TVKVijayHQ X)

ஜூன் 20, சென்னை (Chennai): கள்ளக்குறிச்சியில் (Kallakurichi Illicit Liquor) உள்ள கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் 36 பேர் மெத்தனால் கலந்த விஷ saarayathai குடித்து பலியாகினர். 74 பேருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் (TVK President, Actor Vijay) தனது இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என கூறப்பட்டுள்ளது. Kallakurichi Illicit Liquor Case: விஷச்சாராயம் அருந்தி 31 பேர் அடுத்தடுத்து மரணம்; 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.. கிடுகிடுவென அதிகரிக்கும் உயிர்ப்பலி.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)