ஜூன் 20, கள்ளக்குறிச்சி (Kallakurichi Tragedy): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் (Kalvarayan Hills) மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக காய்ச்சி விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தை (Kallacharayam), மதுவிலக்கு காவல் துறையினர் அவ்வப்போது கண்டறிந்து அழித்து வருகின்றனர். அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை இருந்தபோதிலும், அவர்களின் பார்வைக்கு அப்பால் இச்செயல்கள் தொடர்ந்து வந்தன. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலரும் கள்ளச்சாராயம் அருந்தி இருந்தனர்.
முதற்கட்டமாக 4 பேர் பலி:
இவர்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரே பகுதியை சேர்ந்த 4 பேர் பார்வைக்கோளாறு, காது கேளாமை, கடுமையான வயிற்று வலி உட்பட பல்வேறு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகினர். அடுத்தடுத்து இவர்கள் அனைவரும் சிகிச்சை பலனின்றி பலியான நிலையில், அவர்களின் உடல்களை பெற்று வந்த குடும்பத்தினர் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அச்சமயம் தகவல் அறிந்த காவல் துறையினர், பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.!
அதிகாரிகள் பணியிடைநீக்கம்:
அதேநேரத்தில், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டிவனம், விழுப்புரம்-முண்டியம்பாக்கம், புதுச்சேரி ஜிப்மர் என சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பிரதான மருத்துவமனையில், கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்டு பலரும் அனுமதியாகினர். இந்த விஷயம் குறித்து தமிழ்நாடு அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி சமய்சிங் மீனா, டி.எஸ்.பி தமிழ் செல்வன், காவல் ஆய்வாளர்கள் கவிதா, ஆனந்தன், துணை ஆய்வாளர்கள் பாரதி, பாண்டிச்செல்வி, காவலர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டனர்.
சிபிசிஐடி விசாரணை:
உடனடியாக வழக்கு விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து உத்தரவிட்ட தமிழ்நாடு அரசு, அதிரடி விசாரணை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியது. இதனையடுத்து, களத்தில் இறங்கிய சிபிசிஐடி காவல் துறையினர், கள்ளச்சாராய வியாபாரி கன்னுகுட்டி என்ற கோவிந்தராஜ், அவரின் சகோதரர் தாமோதரன், பெண் ஜோதி உட்பட 3 பேரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷ சாராயத்தில் மெத்தனால் கலந்து இருந்தது உறுதியான நிலையில், அதனால் பலி எண்ணிக்கை மற்றும் பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. Ration Scam: ரேசன் ஊழல் வழக்கு.. நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவிடம் கேள்வி எழுப்பிய அமலாக்கத்துறை..!
மொத்தமாக 31 பேர் மரணம்:
மேலும், புதிய ஆட்சியராக எம்.எஸ் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து, சிபிசிஐடி கோமதி தலைமையிலான அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்கவுள்ளனர். சிபிசிஐடி தலைமை இயக்குனர் அன்பு தலைமையிலும் விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்ய்யப்ட்டர். தற்போது வரை 31 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள நிலையில், 100 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதியாகி இருக்கின்றனர். இவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருவதால், பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கள்ளக்குறிச்சி நகரில் 1 கி.மீ எல்லைக்குள், பிரதான நகரில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குறித்த நபர்கள் பலியானது அம்மாவட்ட மக்களை மட்டுமல்லாது தமிழக அளவிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, இவர்களின் உடலில் கள்ளச்சாராயம் அருந்தியபின் மெத்தனாலின் அளவு அதிகரித்து இருக்கிறது. இதனால் பலியானோர் குடித்த சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது உறுதியானது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயம் பலரின் உயிரை பறித்து இருக்கிறது.
#WATCH | Tamil Nadu: At least 25 people died and several were hospitalised after reportedly consuming illicit liquor in Tamil Nadu's Kallakurichi district: District Collector MS Prasanth
(Visuals from Kallakurichi Government Medical College) pic.twitter.com/WI585Cbxbk
— ANI (@ANI) June 19, 2024