காதலி IPS ஆக வேண்டி 220 கிமீ பாதயாத்திரை சென்ற காதலன்.. நெகிழ்ச்சி சம்பவம்.!

டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியின் IPS கனவு நிறைவேற சுமார் 220 கிலோமீட்டர் பாதயாத்திரை பயணமாக சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

Delhi Man Kanwar Yatra (Photo Credit : @JaikyYadav16 X)

ஜூலை 11, டெல்லி (Delhi News): டெல்லியில் வசித்து வருபவர் ராகுல். இவருக்கு இளம்பெண் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியிருக்கிறது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், ராகுலின் காதலி ஐபிஎஸ் தேர்வுக்கு பயின்று வருவதாக தெரிய வருகிறது. இதனால் தனது காதலி எப்படியாவது ஐபிஎஸ் (IPS) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என விரும்பிய ராகுல் காதலிக்காக இறை வழிபாடுகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். அதாவது சுமார் 220 கிலோமீட்டர் பாதயாத்திரை பயணமாக சிவன் கோவிலுக்கு சென்று 121 லிட்டர் கங்கை நதிநீரை கொண்டு அபிஷேகம் செய்வதாக வேண்டுதல் செய்து தற்போது அதை செயல்படுத்தி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இளைஞரின் மீது கவனம் திரும்பியுள்ளது. Trending Video: டாஸ்மாக்கில் அர்ச்சகரை வைத்து பூஜை செய்த தமிழக அரசு?.. வைரலாகும் வீடியோ.! 

காதலி IPS ஆக 220 கிலோமீட்டர் பாதயாத்திரை பயணம் செய்த காதலன் :

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement