ஜூலை 10, சென்னை (Chennai News): தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கிற்கு அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டத்தில் பயின்றவரை வைத்து செய்ததாக வீடியோ ஒன்று பரவி வந்தது. இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் இதுதான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் வதந்தி. கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தே இந்த வீடியோ பகிரப்பட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த வீடியோவில் உள்ளது டாஸ்மாக் கடையும் அல்ல. அவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் நியமிக்கப்பட்டவரும் இல்லை. வதந்தியை நம்பாதீர்" என்று விளக்கமளித்துள்ளது. வானிலை: கொளுத்தும் வெயில்.. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.!
அர்ச்சகர் பூஜை செய்யும் வீடியோ :
ஓ இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
டாஸ் மார்க்குக்கு ஐயரை கூட்டி வந்து யாகம் வளர்க்கும் பகுத்தறிவு திமுக அரசு 😂😂 pic.twitter.com/22mR3dH9ru
— Hemand Kumar (@HemanthVLR) July 8, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)