ஜனவரி 10, மும்பை (Technology News): சென்னையில் பிறந்த எஸ்.என். சுப்பிரமணியத்தின் ஆண்டு வருமானம் 51 கோடி ரூபாயாம். லார்சன் & டூப்ரோவின் நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு, திட்ட வகுப்புப் பொறியாளராகப் (Project Planning Engineer) பணியில் சேர்ந்தார். 2023ஆம் ஆண்டு அந்நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில் லார்சன் & டூப்ரோவின் நிறுவன ஊழியர்களுடன் காணொலி வாயிலாக எஸ்.என்.சுப்பிரமணியன் உரையாற்றினார். Power Saving Tips: மின்சார கட்டணம் அதிகம் வருகிறதா? இதைப் பின்பற்றி பில் தொகையை பாதியாக்கலாம்!

எல் அண்ட் டி நிறுவனத் தலைவர் கருத்தால் சர்ச்சை:

அப்போது பேசிய அவர், ''உங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைக்க முடியவில்லையே. 'ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிக்க முடியும், மனைவிகள் எவ்வளவு நேரம் கணவனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியும். அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள். நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். உலகில் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.'' என்று கூறினார். இவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையே தூண்டியுள்ளது. இந்தியாவில் சராசரி மனிதனின் வார வேலைநேரம் 48 மணிநேரம். ஒரு நாளில் 8 மணி நேர வேலையின்போதே, உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியிருக்கையில் இதை உயர்த்தினால் பாதிப்புகள்தான் அதிகரிக்கும் என்பது பெரும்பாலோனோரின் கருத்தாக உள்ளது.