Student Suicide: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி; மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை.!

தேர்வில் தோல்வியுற்ற வருத்தத்தில் இருந்து வந்த மாணவர், மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். எப்படியேனும் தேர்வில் வெற்றிபெற்று பொறியியல் கல்லூரியில் சேருவேன் என நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், தேர்வு முடிவால் உயிரை மாய்துகொண்ட சோகம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Student Suicide: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி; மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை.!
Suicide file pic (Photo Credit: Pixabay)

மே 14, டெல்லி (New Delhi): சிபிஎஸ்இ கல்விவழித்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் வெற்றியடைந்த மாணவர்கள், தங்களின் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள லட்சுமி (12th Class Student Suicide After Failing 2 Subject in CBSE) நகர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவர் அர்ஜுன் சாக்ஸ்னா, தான் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், உத்திரபிரதேசம் மாநிலம் எட்டாவாஹ் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அர்ஜுன், 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வெழுதிவிட்டு பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு டெல்லியில் வந்து தயாராகி இருந்துள்ளார். தேர்வு முடிவுகளில் அவர் 2 பாடத்தில் தோல்வியுற்றது உறுதியாகவே, மனமுடைந்தவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது அம்பலமானது. விசாரணை நடந்து வருகிறது. Walmart Lay Offs: வணிக வளாகங்களை மூடி ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் வால்மார்ட்; தொடரும் வேலையிழப்பு பிரச்சனை.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement