மே 14, நியூயார்க் (New York): அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற வணிக நிறுவனமான வால்மார்ட் (Walmrt), தனக்கு சொந்தமான பல வணிக வளாகங்களை மூடுவதாக அறிவித்து இருக்கிறது. இதனால் அந்நிறுவனத்தில் நேரடியாக பணியாற்றி வரும் நபர்களின் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும், முதற்கட்டமாக 100 க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்து அறிவித்து இருக்கிறது. அங்குள்ள பே ஏரியா, விஸ்கஸின், மில்வாக்கி நகர்களில் இருக்கும் வால்மார்ட் அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன. Yellow Fever Alert: வெளிநாடுகள் செல்லும் இந்தியர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்; மத்திய சுகாதாரத்துறை உத்தரவு.! 

பல இடங்களில் நிறுவனம் மூடல்: அதேவேளையில் கலிபோர்னியாவில் இருக்கும் 4 கடைகள், ஓஹியோ மற்றும் மேரிலாண்ட் பகுதியில் இருக்கும் தலா 1 கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களில் பலரும் பணிநீக்கம் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தேவைப்படும் வணிக ரீதியான செயல்பாடுகள் தொடர்ந்து கிடைக்கும் எனினும், பல வளாகங்கள் நிதிச்சுமை காரணமாக மூடப்பட்டுள்ளன. அதேபோல, டொராண்டோ மற்றும் அட்லாண்டா ஆகிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், வேறு மையங்களும் மாற்றப்பட்டுள்ளனர். Husband Caught Wife Affair: மனைவியுடன் கள்ளக்காதல் உறவு; நண்பனை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற நடுநடுங்க வைக்கும் சம்பவம்.! 

இலக்குபடி செயல்படும் வால்மார்ட்: வரும் 2026ம் ஆண்டுக்குள் 65% தானியங்கு செயல்பாடு திறனை ஊக்குவிக்கும்பொருட்டு வால்மார்ட் பணிநீக்கம் மற்றும் கடைகள் குறைப்பு பணியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.2023 ம் ஆண்டிலேயே இதுகுறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. 3560 க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி கடைகளை நடத்தி வரும் வால்மார்ட், 360 தள்ளுவண்டி கடைகளையும் வெவ்வேறு நகரங்களில் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.