Boy Died by Heart Attack: 9 வயது சிறுவன் மாரடைப்பால் பரிதாப பலி; திருப்பதி சென்று வீடுதிரும்பும்போது சோகம்.!

இன்றளவில் இளம் தலைமுறை வயதான பின்னர் ஏற்படும் நோய்களின் காரணமாக அவதிப்பட்டு, வாழவேண்டிய வயதிலேயே மரணத்தை தழுவி வருகிறது. இவ்வாறான சோகங்களுக்கு விரைந்து மருத்துவம் மற்றும் அறிவியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும்.

Child Harshit (Photo Credit: @TeluguScribe X)

பிப்ரவரி 16, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜெக்டில் மாவட்டம், தரூர் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷித் (வயது 9). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அச்சமயம் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கிய சிறுவனை குடும்பத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர். ஆனால், சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதனைக்கேட்டு துடித்துப்போன குடும்பத்தினர் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது. Husband Suicide: கணவனின் பேச்சை கேட்காமல் ரீல்ஸ் மோகத்தில் மனைவி; மரத்தில் தூக்கிட்டு உயிரைமாய்த்த சோகம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement