JK Assembly Poll 2024: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்புடன் தொடங்கியது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு; ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் செலுத்தும் மக்கள்.!

மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தேர்தலில், மக்கள் திரளாக கலந்துகொண்டு வாக்களித்து இருக்கின்றனர்.

JK Election Phase 3 (Photo Credit: @ANI X)

அக்டோபர் 01, ஜம்மு (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது நடைபெறுகிறது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும்போதிலும், அவர்களை இராணுவத்தின் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொன்று, அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அக்.01ம் தேதியான இன்று மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்தலில், முதல் இரண்டு கட்டங்கள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தன. இன்று எஞ்சியுள்ள 40 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, காலை 07:00 மணிமுதல் விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெறுகிறது. மக்கள் பலரும் வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். Tragic Accident: கார் விபத்தில் திறந்த ஏர்பேக்.. மூச்சுத்திணறி துடி துடித்து இறந்த 2 வயது குழந்தை..! 

ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தரும் மக்கள்:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement