செப்டம்பர் 30, மலப்புரம் (Kerala News): கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில், 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் போது, குழந்தை தாயின் மடியில் அமர்ந்திருந்துள்ளது. அப்போது விபத்தினால், காரின் ஏர்பேக் திறக்கப்பட்டது. இதில், ஏர்பேக் குழந்தையின் முகத்தை நேரடியாக அழுத்தியதால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். Man Arrested for Kidnapping Boy: படிப்பு செலவுக்காக சிறுவனை கடத்திய வாலிபர்.. நடந்தது என்ன?!
இந்த விபத்து (Accident), காரின் எதிர்புறத்தில் இருக்கும் டேங்கர் லாரியுடன் கார் மோதியதால் நிகழ்ந்தது. காரில் இருந்த மற்ற நால்வரும், குழந்தையின் தாய் உட்பட சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இத்தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஏர்பேக் திறந்து குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.