Gujarat Horror: குஜராத்தை கடந்த 5 ஆண்டுகளில் நடுநடுங்க வைத்த கோர விபத்துகள்; விபரம் இதோ.!

புதிய தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற்றப்பாதையில் பயணம் செய்தாலும், ஒரு சிறு அலட்சியமும், அதீத நம்பிக்கையும் பேரழிவை தரும் ஆற்றல் கொண்டது என்பதை நாம் உணர வேண்டும்.

Gujarat Accidents 2019 - 2024 (Photo Credit: jsuryareddy X)

மே 27, அகமதாபாத் (Gujarat News): இந்தியாவில் கவனிக்கப்படும் மாநிலங்களில் முக்கியமான ஒன்று குஜராத். தொழில்துறை, வளர்ச்சி, நிர்வாகத்திறன் என மேற்கு இந்தியாவின் வாயிலாக மும்பையும், குஜராத்தும் அமைந்து இருக்கின்றன. இந்நிலையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பெரிய அளவிலான விபத்துகள் அடைந்து மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்திய அளவில் கவனிக்கப்பட்ட குஜராத் விபத்துகளில், கடந்த 2019 மே 24ம் தேதி சூரத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் 22 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 2022 அக். மாதம் 30ம் தேதி மொராபி பகுதியில் இருக்கும் பாலம் இடிந்து விழுந்து 141 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2024 ஜனவரி 18ம் தேதி வதோதராவில் படகு கவிழ்ந்து 12 மாணவர்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று மே 26ம் தேதி ராஜ்கோட்டில் உள்ள கேமிங் சென்டரில் நடந்த தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர். Israeli Strikes in Rafah: கட்டிடங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் இராணுவம், டென்ட்டில் குடியிருந்த 35 பேர் பரிதாப பலி.!