Union Budget 2024: விலைவாசி உயர்வுக்கு கட்டுப்பாடு.. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 இலட்சம் கோடி ஒதுக்கீடு..!

கல்வி, தொழில் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Nirmala Sitaraman (Photo Credit: @ANI X)

ஜூலை 23, புதுடெல்லி (New Delhi): மக்களவை மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22 தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி, இரண்டாவது முறையாக மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) பதவியேற்றுக் கொண்டார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பின் முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி, பிரதமரின் இலவச உணவு தானிய திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்தியாவின் பணவீக்கம் குறைந்து 4% என்ற நிலையில் சரிவை சந்திக்கும். 4.1 கோடி நபர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் வழங்கப்படும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். Union Budget 2024: வீடுகளில் சோலார் பேனல்கள்.. இனி மின்சார கட்டணம் குறித்த கவலை வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)