ஜூலை 23, புதுடெல்லி (New Delhi): மக்களவை மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22 தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்படி, மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதால் மின் செலவை குறைக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். 1 கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்க 1.28 விண்ணப்பங்கள் பெறப்பட்டால், திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்படும். இதன் வாயிலாக மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரத்தை சோலார் பேனல்கள் வாயிலாக பெறலாம். சிறிய அளவிலான நியூக்ளியர் மின்சார உற்பத்தி மையங்கள் அமைக்க ஆலோசிக்கப்படும் என்றும் அறிவித்தார்.  உள்நாட்டு உற்பத்தியில் 3.4 % உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக ரூ.11 .1 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநில அரசுடன் இணைந்து பல நகரங்களை வளர்ச்சிப்படுத்து மையமாக மத்திய அரசு இருக்கும். பீகார் மாநிலத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ரூ.11500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்திற்கு கடன் வழங்கும் வங்கிகளை 24 இடங்களில் கூடுதலாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். பேக்கரில் 2400 மெகா வாட் மின்னுற்பத்தி ஆலைகள் அமைக்க ரூ.21400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். Income Tax Slabs Rate 2024: ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் வாங்குபவர்களுக்கு வரி இல்லை.. வருமான வரி விகிதங்களின் மாற்றங்கள்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)