PM Modi Meets Chiranjeevi On Pawan Kalyan's Request: ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண்.. தம்பியை பிரதமர் மோடியிடம் அறிமுகம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!

அமைச்சர் பவன் கல்யாண் தனது சகோதரர் மெகாஸ்டார் சிரஞ்சீவியை சந்திக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

PM Modi Meets Chiranjeevi (Photo Credit: YouTube)

ஜூன் 12, கண்ணாவரம் (Andhra Pradesh News): ஆந்திர மாநிலத்தை பொறுத்தமட்டில் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்று வந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, அம்மாநிலத்தில் தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஒன்றாக செயல்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த தேர்தலில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 150+ தொகுதிகளை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றியது. 17+ தொகுதிகளை மட்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திரபாபு நாயுடு (N Chandrababu Naidu) முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து, பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த பதிவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகியோர் ஆந்திரா வந்தனர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர்கள் ரஜினி காந்த், சிரஞ்சீவி மற்றும் பல அரசியல், சினிமா பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்துள்ளனர். இந்த விழாவின் போது அமைச்சர் பவன் கல்யாண் தனது சகோதரர் மெகாஸ்டார் சிரஞ்சீவியை சந்திக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். Post Office Monthly Income Scheme: அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்.. இணைவது எப்படி?.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)