Youngster Died Accident: கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் கடக்கும்போது அதிக கவனத்துடன் செயல்படவில்லை என்றால், நொடியில் விபரீதம் நடந்து முடிந்துவிடும்.
பிப்ரவரி 28, நிர்மல் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டம், திலாவர்பூர் மண்டல், ஆரிப்.கே கிராமத்தை பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர் அங்குள்ள பயன்சா துணை மின்நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று தனது வேலைக்கு புறப்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்த சுதாகர், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, அவ்வழியாக வந்த கார் மோதி விபத்தில் சிக்கினார். அதிவேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுதாகர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விபத்திற்குள்ளான சிலமணித்துளிகளிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தின் பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. Inga Naan Thaan Kingu: "இங்க நான் தான் கிங்கு" சந்தானத்தின் திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?.. விபரம் இதோ..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)