Shooting Competition: தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி.. தங்கம் வென்ற நெல்லை அரசுப் பள்ளி மாணவன்..!
டெல்லியில் நடந்த இந்திய அளவிலான சைனிக் முகாமில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் நெல்லை மாவட்டம் அரசுப் பள்ளி மாணவர் சண்முகம் தங்கம் வென்றுள்ளார்.
செப்டம்பர் 24, சென்னை (Chennai News): டெல்லியில் நடந்த இந்திய அளவிலான சைனிக் முகாமில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ‘ஸ்னாப் டீம்' பிரிவில் நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசுப் பள்ளி மாணவர் (Nellai district government school) சண்முகம் தங்கம் வென்றுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் (School Education Minister Anbil Mahesh) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "புதுடெல்லியில் இந்திய அளவிலான தால் சைனிக் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார் திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் சண்முகம். "ஸ்னாப் டீம்" எனும் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். வச்ச குறி தப்பாமல் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ள மாணவருக்கு சல்யூட்! வாழ்த்துகள் சண்முகம்" என பதிவிட்டுள்ளார். Praggnanandhaa: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம்; சென்னை வந்தடைந்த ப்ரக்யானந்தா, வைஷாலி, குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு.!
பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)