செப்டம்பர் 24, மீனம்பாக்கம் (Sports News): ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்ட இந்திய செஸ் வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று வரலாற்றுச் சிறப்பிமிக்க சாதனையை படைத்தனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர்கள் தாயகம் திரும்பி வந்தனர். அவர்களுக்கு அந்தந்த மாநில அரசு, விளையாட்டுத்துறை மற்றும் மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. WTC Points Table 2023-2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இந்திய அணி தொடர்ந்து முன்னிலை..!
ப்ரக்யானந்தா பேட்டி:
இந்நிலையில், சென்னைக்கு விமானத்தில் வருகை தந்த பிரக்யானந்தா, அவரின் சகோதரி வைஷாலி, இளம் சாம்பியன் குகேஷ் ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த பிரக்யானந்தா, "எப்ஐடிஇ போட்டியில் தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் இருந்து அடுத்தடுத்து வெற்றிப்படிகளை எடுத்து வைத்து இருந்தததால் தங்கம் கிடைத்தது. எதிர் போட்டியாளர்களும் சிறப்பாக விளையாடினார்கள். எங்களுக்கு இதுவரை ஒத்துழைத்த அனைவர்க்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி" என கூறினார்.
பெற்றோர் பெருமிதம்:
அதனைத்தொடர்ந்து, பிரக்யானந்தாவின் பெற்றோர் (நாகலட்சுமி - ரமேஷ்பாபு தம்பதி) செய்தியாளர்களை சந்தித்தபோது, "ஹங்கேரியில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நான் இருந்தேன். குழந்தைகள் இருவரும் போட்டியில் கலந்துகொண்டனர். ஒவ்வொரு நாளும் எனது குழந்தைகள் மற்றும் இந்திய வீரர்கள் விடாமுயற்சி, கடின உழைப்பை வெளிப்படுத்தியதை நேரில் பார்த்தேன். அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதனை கருதுகிறேன். வரலாற்று சாதனையாக இவற்றை கவனிக்கிறோம். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களால் மகிழ்ச்சி என்ற வார்த்தையை தவிர வேறேதும் கூற இயலவில்லை. ஆனால், உள்ளுக்குள் அவ்வுளவு மகிழ்ச்சி என்பது இருக்கிறது" என தெரிவித்தார்.