‘Thanneer Pandals’ To Beat Summer Heat: கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல்.. பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில், தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு..!

மே தினத்தை முன்னிட்டு க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி துவக்கி வைத்தார்..

Thanneer Pandals (Photo Credit: Facebook)

மே 01, கோவை (Coimbatore News): தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெப்பம் அதிகரித்துள்ளது.இந்நிலையில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் விதமாக பல்வேறு அமைப்பினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தலை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு, க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு (Green Garden Housing Unit Friends Group) சார்பாக கோவை உக்கடம் பகுதியில்  நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.வள்ளியம்மை பேக்கரி அருகில் துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி, மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், மாமன்ற உறுப்பினர் முபஷீரா, உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர். இதில் பொதுமக்களுக்கு தண்ணீர் பாட்டில், தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. TN Weather Report: அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)