Shocking Video: உணவுக் கழிவுகளை அலட்சியமாக ஓடும் இரயிலில் இருந்து வீசிய பணியாளர்கள்; அதிர்ச்சி வீடியோ லீக்.!
அதிலும் இரயில் பயணம் பிடிக்காத நபர்கள் யார் இருப்பார்கள்?. அந்த இரயில் பயணம் நம்மிடையே எப்போதும் மறக்க முடியாத நினைவுகளை வழங்கக்கூடியவை ஆகும்.
ஜனவரி 02, மும்பை (Social Viral): தொலைதூர இரயில் பயணங்களில், மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய இரயிலுக்குள்ளேயே உணவகமானது அமைக்கப்பட்டு இருக்கும். அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை பயணிகள் வாங்கி சாப்பிடுவார்கள். அதன் வாயிலாக கிடைக்கும் கழிவுகள் மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிப்பில் கிடைக்கும் எஞ்சிய பொருட்களை பாதுகாப்பான முறையில் அகற்ற, உணவக நிர்வாகத்தினரால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், இரயிலில் எஞ்சிய கழிவு பொருட்களை, உணவக பணியாளர்கள் ஓடும் இரயிலில் இருந்து கீழே வீசும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சுற்றுச்சூழலை கேடாக மாற்றும் விஷயத்தை, இரயில்வே நிர்வாகத்தின் ஒப்பந்த பணியாளர்கள் மேற்கொண்டுள்ளது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. Puri Jagannath Temple Dress Code: கிழிந்த டிரஸ், ஷார்ட்ஸ் அணிந்து பூரி ஜெகன்நாத் கோவிலுக்கு வர தடை: நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)