Shree Jagannath Temple (Photo Credit: Wikipedia)

ஜனவரி 02, பூரி (Odisha News): ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரியில், உலகப்புகழ்பெற்ற ஜெகன்நாத் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடக்கும் தேர்த்திருவிழா என்பது மிகவும் பிரசித்தி பெற்ற விழா ஆகும். இந்நிகழ்வுக்காக தயார் செய்யப்படும் பிரம்மாண்ட தேர், ஜூன் மாதம் பூரி நகரை வலம்வரும். இந்த தேர் திவுவிழாவுக்காக பல மாதங்கள் தொடர்ந்து மக்கள் வேலை செய்தவண்ணம் இருப்பார்கள்.

மார்டன் உடைகளுக்கு தடை: இந்நிலையில், பூரி ஜெகன்நாத் கோவில் (Shree Jagannath Temple Administration SJTA) நிர்வாகம் பக்தர்களுக்கு கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இன்றளவில் மார்டன் உடைகள் என்று கூறப்படும் ஷார்ட்ஸ், கிழிந்த ஜீன்ஸ் போன்றவைகளை ஆண்-பெண் என எந்த பக்தர்களும் அணிய கூடாது. அவ்வாறு அணிந்து வந்தால் கோவிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதி செய்யப்படமாட்டர்கள். Tambaram Shocker: சாட்சியை அழிக்க மெடிக்கல் கடை உரிமையாளர் கொடூர கொலை; மாமூல் கேட்ட ரௌடியின் ஸ்கெட்ச்சில் பலியான அப்பாவி.. கொலையாளிகளுக்கு மாவுக்கட்டு.! 

பாரம்பரிய உடைகள் அணிய அறிவுறுத்தல்: விடுதி அறைகளில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு, வாசகங்கள் மூலமாகவும் அதனை அறிவுறுத்த வேண்டும். பாரம்பரிய உடைகள் மட்டுமே அணிந்து வந்தால் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான சோதனையும் அதிகப்படுத்தப்பட்டு இருக்கும். பெண்கள் சேலை, சுடிதார் போன்றவற்றை அணிந்து கோவிலுக்கு வரலாம். ஆண்கள் பாரம்பரிய உடைகள் அணிந்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.