Newly Married Couple Cast Their Vote: திருமணம் முடிந்த கையோடு ஜனநாயகத்தின் முதல் கடமையை முடித்த ஜோடி.. வைரலாகும் வீடியோ..!
உதம்பூரில் திருமணமான கையோடு திருமண தம்பதிகள் வந்து வாக்களித்த சம்பவம், தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
ஏப்ரல் 19, உதம்பூர் (Udhampur): இந்திய நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் (2024 General Elections) ஆனது நாடு முழுவதும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா தேர்தல்கள் 2024-ன் வாக்கு பதிவானது இன்று தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு வந்து பொதுத் தேர்தலில் வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து, திருமணமான பெண் பேசியதாவது, ".நேற்று எங்கள் திருமண நடந்தது. இருந்தாலும் இன்று சடங்குகள் முடிந்து உடனே, எனது கணவரிடம் நாங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று கூறினேன். யாரும் உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்" என்று கூறினார். தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. தொடர்ந்து இந்த தம்பதிகளை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். Kamal Haasan Casted Vote: "இந்த தேர்தல் எல்லா தேர்தலைவிடவும் முக்கியம்".. வாக்காளர்கள் கண்டு வியக்க வாக்களித்துவிட்டு பேசிய உலக நாயகன்..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)