Fire Crackers Factory Blast: சாத்தூரில் சோகம்: பட்டாசு ஆலை வெடித்து, தொழிலாளி பரிதாப பலி.!

சிவகாசி மற்றும் அதனை சுற்றிள்ள விருதுநகர் மாவட்ட பகுதிகளில் பிரதான கைத்தொழிலாளாகவும், முக்கிய தொழில் கட்டமைப்பாகவும் பட்டாசு ஆலை இருந்து வருகிறது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பலன் பெறுகிறார்கள். ஆனால், ஆபத்தும் அதிகம்.

Sathur Fire Crackers Factory Blast (Photo Credit: @ANI X)

டிசம்பர் 14, விருதுநகர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதமானமாக பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை நம்பி அம்மாவட்ட மக்களின் பிழைப்பு என்பது இருக்கிறது. அவ்வப்போது பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்துகளும் நிகழும். இந்நிலையில், இன்று விருதுநகர் சாத்தூர், பனையபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பட்டாசு ஆலை தொழிலாளி சண்முகராஜ் (வயது 38) என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் அங்குள்ள கண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தீயணைப்பு படையினர் சண்முகராஜின் உடலை மீட்டதைத்தொடர்த்து, காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Tirupattur Shocker: வேனின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி: வீட்டு வாசலில், தாயின் கண்முன் நடந்த சோகம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement