X Password as RCBTrophy@000: ஆர்.சி.பி அணியை கலாய்த்து பாஸ்வேர்ட் வைத்த ரசிகர்: சென்னை வெள்ளத்தில் அம்பலமான வேறலெவல் உண்மை.!
இந்த ஆண்டாவது ஆர்.சி.பி அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என பலரும் நம்புகிறார்கள்.
டிசம்பர் 05, பெங்களூர் (Bangalore): இந்திய அளவில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியானது, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஐ.பி.எல் தொடரில் பத்துக்கும் மேற்பட்ட அணியில் நடப்பாண்டில் மோதும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து களம்கண்டு வருகிறது.
ஒரு வெற்றி பதிவு செய்யப்படவில்லை: கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக விளையாடி வரும் ஆர்சிபி அணி, ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. அந்த அணியின் கேப்டனாக இந்திய அணியை முன்னதாக வழிநடத்தியிருந்த விராட் கோலி தேர்வு செய்யப்பட்ட போதிலும், அணியில் பல பக்கபலமான வீரர்கள் இருந்தும் அவர்களால் வெற்றி இறுதிவரை எட்டப்படாமல் இருக்கிறது.
3 முறை போராடி தோல்வி: கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்ற போட்டியை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது, 2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் ரன்னராக வந்துள்ளனர். பிற அனைத்து போட்டிகளிலும் பிளே ஆப் மற்றும் முதல் தர நிலையிலேயே வெளியேறி இருக்கின்றனர். ரசிகர்களுக்கு விராட் கோலி மீது இருக்கும் அதீத எதிர்பார்ப்பு, அவர் எப்படியாவது கோப்பையை அணியுடன் சேர்ந்து வெல்வார் என்பது தான். Cooking Tips: சமையலில் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய ஸ்மார்ட் டிப்ஸ்: அசத்தல் விபரம் இதோ.!
2023-லும் ஏமாற்றம்: ஒவ்வொரு ஆண்டும் இந்த வெற்றி எதிர்பார்க்கப்படும் நிலையில், அவை இறுதிவரை எட்டிகனியாக இன்று வரை இருக்கிறது. கடந்த 2023 ஐபிஎல் தொடரில் கூட 14 போட்டிகளில் பெங்களூரு அணி 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் விளையாட்டுக்கு தகுதி போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு இல்லாமல் லீக் நிலையிலேயே வெளியேறியது.
புயலில் பகீர் உண்மை அம்பலம்: இந்நிலையில், இதனை கலாய்க்கும் பொருட்டு இளைஞர் ஒருவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) கணக்குக்கு பாஸ்வேர்ட் வைத்த சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் ஆந்திராவில் கரையை கடக்கவிருந்த மிக்ஜாங் புயலின் காரணமாக கடும் மழை ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டித்து வைக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்களின் செல்போனில் சார்ஜ் ஏற்ற வசதி இல்லாமலும் அவதிப்பட்டனர்.
ட்விட்டர் பாஸ்வேர்ட்: இதனை ட்விட்டர் பயனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அப்போது, அவரின் பின் தொடர்பாளர் ஒருவர் தங்களது கணக்கின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை கொடுத்தால், நான் சிறிது நேரம் உங்களது கணக்கை நிர்வகித்து என்னால் ஆன உதவியை செய்வதாகவும் கூறியிருக்கிறார்.
கண்டிப்பும்-கலாய்ப்பும்: அப்போது, அவர் தனது கணக்கின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை தெரிவித்தது தான் இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் தனது பாஸ்வேர்டில், RCBTrophy@000 என பதிவிட்டுள்ளார். இது ஆர்சிபி தற்போது வரை ஒரு கோப்பை கூட வெல்லாமல் இருப்பதை மறைமுகமாக கலாய்க்கும் பொருட்டு அமைக்கப்பட்டதாக பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். மேலும், ஆர்சிபி அணிக்கு எதிரான ரசிகர்கள் இதனை கிண்டல் அடித்தும் வருகின்றனர்.