செப்டம்பர் 29, துபாய் (Sports News): ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) கிரிக்கெட் போட்டியில், நேற்று இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan Cricket) இரண்டு அணிகளும் சரிசமமான செயல்பாடுகளுடன் மோதியதால் ஆட்டம் சுவாரஷியத்துடன் நகர்ந்து வந்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முதல் பேட்டிங் 10 ஓவர்களில் அசத்தலாக இருந்தாலும், பின் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ் தனது சுழற்பந்து திறனை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சஜிபஷடா பர்ஹான் அரைசதம் கடந்து அசத்தினார். பாக்கர் ஜமன் அரை சதத்தை நெருங்கினார். 19.1 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 146 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டை இழந்தது ஏமாற்றத்தை அளித்தது.
ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி போராடி வெற்றி(Asia Cup 2025 India Vs Pakistan Final 2025):
சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 24 ரன்கள் அடித்து அவுட்டாகினார். தொடர்ந்து, திலக் வர்மா, சிவம் டியூப் நின்று ஆடினர். குறிப்பாக அவர் 53 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இறுதியில் 2 ஓவர்களில் 17 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணி ரசிகர்கள் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. 19வது ஓவரில் சிவம் விக்கெட் இழந்தது. எஞ்சியுள்ள 6 பந்துகளில் திலக் வர்மாவும், ரிங்கு சிங்கும் களத்தில் இருந்தனர். 5 பந்துகளில் 5 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. திலக் வர்மா சிக்ஸ், போர் என வெற்றிக்கு வழிவகை செய்தார். ரிங்கு சிங் இறுதியாக 1 பந்தில் 4 ரன்கள் அடித்தார். இதனால் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது. இந்திய அணியின் வெற்றி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆசியக்கோப்பை 2025ஐ இந்தியா வென்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Team India Victory IND Vs PAK Final 2025: முடிவுக்கு வந்த இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 கிரிக்கெட் போட்டி.. இந்தியா மாஸ் வெற்றி.!
கோப்பையே இல்லாமல் வெற்றியை கொண்டாடிய இந்தியா :
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது வலைப்பக்கத்தில், ஆபரேஷன் சிந்தூர் விளைவில் ஒன்றுதான் இதுவும். இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். இந்தப் போட்டியின் வெற்றிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை பெற மறுப்பு தெரிவித்தனர். இதனால் அவர் தன்னுடன் ஹோட்டலுக்கு கோப்பையை எடுத்துச் சென்று விட்ட நிலையில், ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் அணி இது தொடர்பாக முறையீடு செய்துள்ளது. விரைவில் இந்த செயலுக்கு தீர்வு காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தால் இந்திய கிரிக்கெட் அணியினர் அதிர்ச்சி அடையவில்லை என்றாலும், அவர்கள் கோப்பை இருப்பது போல பாவித்து மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மெஸ்ஸி ஸ்டைலில் ஸ்லோ மோஷன் வாக் :
India celebrated enthusiastically without receiving the official trophy, as political drama delayed and ultimately derailed the award ceremony! #AsiaCup pic.twitter.com/XKkglt8ERg
— asif🇮🇳 (@_asif) September 29, 2025
இந்தியா அணி வீரர்கள் கோப்பை இல்லாமல் வெற்றி கொண்டாட்டம் (India Victory Highlights) :
Asia Cup 2025 celebration without trophy. Team India players making fun 😂😂🔥 #AsiaCup2025 pic.twitter.com/4eJ3YOaUpn
— Ahtasham Riaz (@ahtashamriaz22) September 28, 2025