ENG Vs IND 5th Test, Day 5 (Photo Credit: @cricbuzz X)

ஆகஸ்ட் 04, ஓவல் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டாரில் (Jio Hotstar) நேரலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. நடந்து முடிந்த 4 போட்டிகள் முடிவில், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.  Chris Woakes: ஒற்றைக் கையுடன் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ்.. வெற்றிக்கு போராடிய இங்கிலாந்து..!

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

இந்நிலையில், ஜூலை 31ஆம் தேதி இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND) மோதும் 5வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஓல்லி போப் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 69.4 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57, சாய் சுதர்சன் 38 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜாக் கிராலி 64, ஹாரி புரூக் 53 ரன்கள் அடித்தனர். இந்தியா சார்பில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்தியா த்ரில் வெற்றி:

இதன்பின்னர், களமிறங்கிய இந்தியா 2வது இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 118, ஆகாஷ் தீப் 66, ரவீந்திர ஜடேஜா 53, வாஷிங்டன் சுந்தர் 53 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து சார்பில் ஜோஸ் டங் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து, இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 6 விக்கெட்களை இழந்து 339 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஹரி புரூக் 111, ஜோ ரூட் 105 ரன்கள் அடித்தனர். இந்நிலையில், 5ஆம் நாளில் இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்களும், இந்தியா வெற்றி பெற 4 விக்கெட்களும் தேவைப்பட்டது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் முகமது சிராஜ் 5, பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதன்மூலம், இந்தியா 2-2 என தொடரை சமன் செய்தது.