Cooking Tips: சமையலில் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய ஸ்மார்ட் டிப்ஸ்: அசத்தல் விபரம் இதோ.!
Cooking Couple (Photo Credit: Pixabay)

டிசம்பர் 04, சென்னை (Chennai): இன்றளவில் பல வீடுகளில் சமையல் என்பது ஆண் - பெண் இருபாலரும் பகிர்ந்துகொள்ளும் விஷயமாக இருக்கிறது. முந்தைய காலங்களிலும் மனைவியை புரிந்துகொள்ளும் கணவரால் இவ்வாறான விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டது எனினும், இன்றளவில் அவை அதிகரித்து இருக்கின்றன. அந்த வகையில், சமயலறையில் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

டிப்ஸ் இதோ: வீட்டில் நாம் தனியாக அல்லது துணையோடு இருக்கும்போதும், உறவினர்கள் வரும்போது சமைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சமையல் அறையில் ஆணோ, பெண்ணோ இருவரும் தந்திரத்துடன் இருந்தால், உணவும் சுவையாக இருக்கும். சமையல் செய்யும் இடமும் புதுப்பொலிவுடன் காணப்படும். அதுகுறித்த அசத்தல் டிப்ஸ் பின்வருமாறு.,

வானெலி கறை நீங்க: வெங்காய்சட்னி செய்யும்போது, சிறிதளவு எள் வறுத்து பொடித்து சேர்த்துக்கொள்ள ருசி நன்றாக இருக்கும். துருக்கள் கொண்ட தோசைக்கல், வானெலி போன்றவற்றின் கறைகளை நீக்க உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து துரு படிந்த இடங்களில் தேய்க்க நிறம் மாறும். Vivo S18 Smartphone: விவோ நிறுவனத்தின் எஸ்18 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?.. விற்பனைக்கு அறிமுகமாகும் தேதி அறிவிப்பு.! 

மண் பாத்திர ரகசியம்: கரப்பான் பூச்சி தொல்லை சமயலறையில் இருந்தால் கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெயை நீரில் கலந்து தெளிக்கலாம். மண் பாத்திரத்தை புதிதாக வாங்கினால், அடுப்பில் எண்ணெய் தடவி சூடேற்றி உபயோகம் செய்தால் மண் வாசம் வராது. விரிசல் விழாமல் இருக்கும்.

அடை ருசியாக கிடைக்க: சாக் பிசினை துணியில் சுற்றி, வெள்ளிப்பொருட்கள் இருக்கும் இடத்தில் வைத்தால் திருப்பிடிக்காமல், கருத்துப்போகாமல் இருக்கும். அடை செய்பவர்கள் கடலைப்பருப்பை ஊறவைத்து அரிசி சேர்த்து அரைக்கும்போது, வேகவைத்த உருளை / மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக்கொண்டால் அடையின் ருசி சிறப்பாக இருக்கும்.

மிக்சி பளிச்சிட: சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் கீழே கொட்டிவிட்டால், கோலப்பொடியை அதன் மீது தூவி துடைக்க எண்ணெய்ப்பசை நீங்கும். மிக்சியை தினமும் கழுவும்போது, டூத் பேஸ்ட் பயன்படுத்தினால் பளிச்சென இருக்கும்.

சப்பாத்தி மிருதுவாக கிடைக்க: வெண்டைக்காயினை சமைக்கும் முன்னதாக, அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு தெளித்தால் ஒன்றோடொன்று சேராமல் இருக்கும். பாகற்காயினை வில்லையாக நறுக்கி, எலுமிச்சை சாறில் ஊறவைத்து பொரித்தால் சுவை அருமையாக இருக்கும். சப்பாத்திக்கு மாவு பிசைந்தால், அதனுடன் மக்காச்சோளமாவு சிறிதளவு சேர்த்தால் சப்பாத்தி மிருதுவான பத்துடன் கிடைக்கும். Vivo S18 Smartphone: விவோ நிறுவனத்தின் எஸ்18 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?.. விற்பனைக்கு அறிமுகமாகும் தேதி அறிவிப்பு.! 

பாயசம் மணக்க: பால் பாயாசத்துடன் முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் பழத்துடன் பாதம் பருப்பை அரைத்து சேர்ப்பது சுவையை அதிகரிக்கும். வெண்டைக்காயின் பிசுபிசுப்புத்தன்மை நீங்க எண்ணெய் சேர்த்து வதக்கி குழம்பு வைக்கலாம். சப்பாத்தி மாவின் மீது எண்ணெய் தேய்த்து பிரிட்ஜில் வைக்க, மாவு கெடாமல் இருக்கும்.

தோசை மொறுமொறுப்பாக கிடைக்க: முட்டை வேகவைக்கும்போது சிறிதளவு கடலை எண்ணெய் மற்றும் கல் உப்பு சேர்க்க, எளிதில் முட்டை வெந்துவிடும். பாதாமின் தோல்களை நீக்க, கொதிக்கும் நீர் கொண்டு அதனை ஊறவைக்க வேண்டும். இட்லி மாவோடு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்ற, தோசை மொறுமொறுவென பொன்னிறத்துடன் கிடைக்கும்.

முட்டை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க: மழைக்காலத்தில் உப்பு சேராமல் இருப்பதற்கு, பிளாஸ்டிக் மீது உப்பை கொட்டி, காற்றுபுகாமல் ஜாடியில் அடைத்து வைக்க வேண்டும். புளிக்குழம்பு செய்யும்போது வெந்தயம் சேர்த்து தாளிக்க சுவை அதிகரிக்கும். முட்டை விரைந்து கெடாமல் இருக்க, அதன்மீது எண்ணெய் தேய்த்து வைக்க வேண்டும்.

வாழைப்பூ சுத்தம் செய்ய: முருங்கைக்காயினை துண்டாக நறுக்கி, காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்க நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும். வாழைப்பூவின் சுத்தம் செய்கையில், சிறிதளவு நல்லெண்ணெய் கையில் தடவிக்கொள்ள கறை கைகளில் ஏற்படாது. காரக்குழம்பில் காரம் அதிகரித்துவிட்டால், சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம். Yash 19 Movie Update: நடிகர் யாஷின் 19வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஷாக்கிங் சர்ப்ரைஸால், கொண்டாடட்டத்தில் ரசிகர்கள்..! 

மெதுவடை ரகசியம்: அரிசி சாதம் உதிரியாக இருக்க, அரிசியை ஊறவைக்கும்போதே ஐஸ்கட்டி சேர்த்து ஊறவைக்கலாம். கறிவேப்பில்லை வாடாமல் இருக்க, நீரில் கழுவி ஊறவைத்து காற்று புகாத டப்பாவில் இட்டு பிரிட்ஜில் வைக்க வேண்டும். மெதுவடை மொறுமொறுப்புடன் கிடைக்க உளுந்துடன் பச்சரிசி சேர்க்க வேண்டும்.

எறும்புத்தொல்லை நீங்க: கீரையை சமைக்கும்போது எண்ணெய் சேர்த்து சமைக்க, கீரையின் நிறத்தில் மாற்றம் இருக்காது. சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும்போதே நெய் சேர்க்க சாம்பார் சுவையாக இருக்கும். எறும்புத்தொல்லை நீங்க பெருங்காயத்தூளை எறும்பு புற்றின் மீது தூவலாம். குக்கர் உபயோகம் செய்யப்படாத நேரங்களில், அதனை மூடிவைக்க கூடாது.

சாதம் சிறிது குழைந்துவிட்டால்: வெங்காயத்தினை நறுக்கும் முன்பு, கத்தியை சூடேற்றி நறுக்கினால் கண்ணெரிச்சல் இருக்காது. சாதம் வெடிக்கும்போது சிறிதளவு குழைந்துவிட்டால், நல்லெண்ணெய் சேர்ப்பது சாதத்தை குழையாமல் பார்க்கும். சாம்பார் மனமாக இருக்க வறுத்த வெந்தயத்தை இறுதியில் சேர்க்க வேண்டும்.

பாகற்காய் கசப்பு நீங்க: கறிவேப்பில்லை செடியின் வளர்ச்சிக்கு புளித்த மோர் ஊற்றலாம். பாகற்காய் குழம்பு வைப்பவர்கள், ஒரு காரட் சேர்த்துக்கொண்டால் கசப்பு தெரியாமல் பாகற்காயை சமைத்து சாப்பிடலாம்.