Australian Cricket Player Retirement: முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர்..!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ வேட் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
மார்ச் 16, ஹோபர்ட் (Cricket News): ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் இடக்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் தாஸ்மானியா- மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஷெப்பீல்டு ஷீல்டு இறுதிப்போட்டியோடு தனது முதல் தர கிரிக்கெட்டில் (First-Class Cricket) இருந்து ஓய்வு பெற போவதாக தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளை நிற பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் அவர் அறிவித்துள்ளார். 2021-ஆம் ஆரம்பத்தில் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட மேத்யூ வேட், அந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். Minor Girl Raped: சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் – 2 ஊழியர்களின் காம வெறிச்செயல்..!
மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக இருபது ஓவர் போட்டி தொடர்களுக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். தற்போது வருகிற ஜூன் மாதம் நடைபெறும் இருபது ஓவர் உலகக்கோப்பையில் அணியில் இடம்பெற வேண்டும் என்ற துடிப்போடு இந்த முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, வரவிருக்கும் ஐ.பி.எல் சீசனில் குஜராத் அணிக்காக விளையாடும் மேத்யூ வேட், ஆரம்பத்தில் ஒரு சில ஆட்டங்களில் அவரால் பங்கேற்க இயலாது.