AB de Villiers Issues Apology: விராட் கோலி குறித்து தவறான தகவல் வெளியீடு.. மன்னிப்பு கேட்ட ஏபி டி வில்லியர்ஸ்.. நடந்தது என்ன?.!

இந்திய அணியின் விராட் கோலியின் சொந்த வாழ்க்கை குறித்து தவறான தகவலை வெளியிட்டதற்கு முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

AB de Villiers & Virat Kohli (Photo Credit: Facebook)

பிப்ரவரி 09, புதுடெல்லி (New Delhi): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி (Virat Kohli). இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று மட்டும் பிசிசிஐ தெரிவித்தது. இது ரசிகர்களிடம் விவாதமாக மாறியது.

ஏபி டி வில்லியர்ஸ் தகவல்: இந்நிலையில் விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் (Anushka Sharma) தங்களுக்கு இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் (AB de Villiers) தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய ஏபி டி வில்லியர்ஸ், "விராட் கோலி நன்றாக இருக்கிறார். விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் தங்களுக்கு இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர். அதனால் தான் தனது குடுமபத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் பெரும்பாலானவர்களின் முன்னுரிமை குடும்பம் என்று நான் நினைக்கிறேன். அதனால், விராட் கோலியை தவறாக மதிப்பிட கூடாது" என்று கூறியிருந்தார். . இதனால் ரசிகர்கள் விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதிக்கு வாழ்த்து கூறி வந்தனர். Rajinikanth's 'Lal Salaam' Released: மிரட்டலாக வெளியான லால் சலாம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

மன்னிப்பு கேட்ட ஏபி டி வில்லியர்ஸ்: இந்நிலையில் இந்திய அணியின் விராட் கோலியின் சொந்த வாழ்க்கை குறித்து தவறான தகவலை வெளியிட்டதற்கு முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் மன்னிப்பு தெரிவித்துள்ளார். அதாவது, "எனது யூடியூப் சேனலில் நான் கூறியது போல் குடும்பம் முதன்மையானது. நான் அதே நேரத்தில் ஒரு பயங்கரமான தவறு செய்தேன், தவறான தகவலைப் பகிர்ந்து கொண்டேன், அது உண்மையல்ல. விராட் கோலியின் விலகலுக்கான காரணம் யாருக்கும் தெரியாது. அவரது இடைவெளிக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அவர் இதிலிருந்து வலுவாகவும், சிறப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் திரும்பி வருவார் என நம்புகிறேன்." என்று பேசியுள்ளார்.