Actor Robo Shankar Died (Photo Credit: @raagadotcom X)

செப்டம்பர் 18, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் ரோபோ சங்கர் (Robo Shankar). விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஸ்டாண்டப் காமெடியாக அடையாளம்பெற்றவர், பின்னாளில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். கிராமப்புற நிகழ்ச்சிகளில் கட்டுக்கோப்பான உடலுடன் ரோபோ போல நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தவர், பின்னாளில் ரோபோ சங்கர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.

ரோபோ சங்கர் நடித்த படங்கள் (Robo Shankar Acted Movies List):

கடந்த 2011ம் ஆண்டு வெளியான ரௌத்திரம் படத்தில் முதலில் நடிக்க தொடங்கியவர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நல்ல கவனத்தை பெற்றார். தொடர்ந்து வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைக்காரன், விஸ்வாசம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக அடையாளம் பெற்றார். இவரின் தனிப்பட்ட நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா விஜயுடன் பிகில் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணம் (Actor Robo Shankar Passes Away):

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டவர், சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி (Robo Shankar Latest News) பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு தற்போது 46 வயது தான் ஆகிறது. மதுரையை பூர்வீகமாக கொண்ட ரோபோ சங்கர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து மக்கள் மத்தியில் திரைத்துறையால் அறிமுகமானார். அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடியன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டதுபோல சூழ்நிலை உண்டாகிய நிலையில், ரோபோ சங்கர் அதனை தக்க வைத்திருந்தார். அவரும் தற்போது இயற்கை எய்தியுள்ளார். Deepika Padukone: 'கல்கி 2' படத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கம்.. தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு..! 

 

ரோபோ சங்கர் மரணம் காரணம் என்ன? (Robo Shankar Death Reason):

திரைத்துறையில் அறிமுகமாகியபின் ரோபோ சங்கர் படத்தில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என தொடர்ந்து வேளையிலேயே மும்மரமாக இருந்து வந்தார். இதனால் சரியாக உணவு கூட எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து வேலையை கவனித்தார். இதுபோக அவருக்கு உடலுக்கு கேடுகளை விளைவிக்கும் பழக்கமும் இருந்துள்ளன. இந்த தகவலை அவர் வெளிப்படையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றிலும் தெரிவித்து இருந்தார். அப்போது மரண படுக்கையில் இருந்த ரோபோ சங்கரை நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் உதவியால் காப்பாற்றி இருக்கின்றனர். தவறான பழக்கத்தால் மஞ்சள் காமாலை உட்பட பல்வேறு நோயை எதிர்கொண்டவர், இறுதியில் பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்.

உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கம் உயிரை கொல்கிறது ஏன்?

நமது உடலுக்கு தீங்கான மது மற்றும் புகைப்பழக்கம் உடலில் மெல்லக்கொல்லும் விஷம் போல தங்கிவிடும். அதனை தினமும் எடுத்துக்கொண்டு இருப்பது நாம் உணவுடன் சிறுகச்சிறுக விஷத்தை உண்பதற்கு சமம். இந்த விஷம் நமது உடலுக்குள் சென்று ஒவ்வொரு உள்ளுறுப்புகளையும் சேதப்படுத்தும். மூளையின் செயல்பாடுகளையும் தாக்கி மனநல கோளாறு உட்பட அனைத்து பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இறுதியில் நமக்கு மரணம் என்ற பரிசு படிப்படியாக கிடைக்கும். இறுதிக்கட்டத்தில் இவ்வாறான கேடான பழக்கத்தை கையில் எடுத்தவர் துடிதுடித்து உயிரிழக்க நேரிடும் என்பதே சோகத்தின் உச்சம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து தெரிவித்து, தவறான பழக்கத்தை கைவிடுமாறு வைத்த கோரிக்கை தொடர்பான வீடியோ:

மது, புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்!