India Vs Australia Cricket Match (Photo Credit: @BCCI X)

அக்டோபர் 23, பார்க்லேண்ட் (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மோதிக்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தன. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்தது. இன்று அடிலெய்டு ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரலையில் காணலாம். India Women Vs New Zealand Women: இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி எப்போது?.. நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு? 

இந்தியா எதிர் ஆஸ்திரேலியா (India Vs Australia Cricket):

இன்று காலை தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சார்பில் முதலில் விளையாடிய ரோஹித் சர்மா 97 பந்துகளில் 73 ரன்கள் அடித்து இருந்தார். ஷ்ரேயஸ் ஐயர் 77 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இருந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் காரணமாக இருவரும் அரைசதம் கடந்தனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் (Team Australia) வீரர்களின் பந்துவீச்சு காரணமாக பல பந்துகளில் ரன்களை எதிர்பார்த்த அளவு எடுக்க முடியவில்லை என்றாலும், நிதானமானாக ஆடி ரன்களை குவித்தனர். India Vs Australia: இந்தியா-ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? வானிலை நிலவரம் என்ன? 

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி (IND Vs AUS 2nd ODI Match Today):

தொடர்ந்து விளையாடிய அக்சர் படேல் 41 பந்துகளில் 44 ரன்கள், கே.எல். ராகுல் 15 பந்துகளில் 11 ரன்கள், வாஷிங்க்டன் சுந்தர் 14 பந்துகளில் 12 ரன்கள், ஹர்ஷித் ராணா 18 பந்துகளில் 24 ரன்கள், அர்ஷிதீப் சிங் 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்த இந்திய கிரிக்கெட் அணி 264 ரன்கள் எடுத்தது. இதனால் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு காரணமாக சீரான இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்களும் அடுத்தடுத்து பறிபோனது. விராட் கோலி வழக்கம்போல 4 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்கலாமல் டக்கவுட் ஆகி வெளியேறினார். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் பந்துவீசிய ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், சேவியர் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தனர்.

இறுதி நேரத்தில் கைகொடுத்த ஹர்ஷித் ராணாவின் ஆட்டம் (HarshitRana IND Vs AUS Today):

தூக்கியடித்த அக்சர் படேல் (Axar Patel IND Vs AUS Today):

ரோஹித் சர்மாவின் ட்ரேட் மார்க் (Rohit Sharma India Vs Australia Match):