Yuvraj Singh and Abhishek Sharma Dancing Together (Photo Credit: @jod_insane X)

அக்டோபர் 02, பஞ்சாப் (Sports News): பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் நேற்று இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவின் சகோதரி கோமல் சர்மாவின் திருமணம் நடைபெற்றது. அப்போது, அபிஷேக் சர்மாவுடன், யுவராஜ் சிங் மற்றும் பாடகர் ரஞ்சித் பாவா இணைந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். AUSW Vs NZW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; போராடிய சோஃபி டெவின்.. ஆஸ்திரேலியா மகளிர் அணி அபார வெற்றி..! 

உற்சாக நடனம்:

ஆசியக்கோப்பை 2025 தொடரில் அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார். 314 ரன்கள், 3 அரை சத்தங்கள் என அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அக்டோபர் 03ம் தேதி அபிஷேக் ஷர்மாவின் சகோதரி கோமல் ஷர்மாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. திருமண நிகழ்வில் யுவராஜ் சிங் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

யுவராஜ் சிங், அபிஷேக் ஷர்மா நடனமாடும் காட்சி (Yuvraj Singh and Abhishek Sharma Dancing Together):