IPL Auction 2025 Live

IPL 2024 auction: ஐ.பி.எல் ஏலம் நடத்தும் முதல் பெண்! யார் இந்த மல்லிகா சாகர்?.!

ஐபிஎல் மினி ஏலம் நிகழ்வில் பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தின் பொறுப்பாளராக செயல்பட உள்ளார்.

Mallika Sagar (Photo Credit: @CricCrazyJohns X)

டிசம்பர் 19, துபாய் (Dubai): 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ள தொடருக்கான மினி ஏலம் இன்று துபாயிலுள்ள கோகோ- கோலா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. ஐ. பி. எல். தொடர் வரலாற்றில் முதல்முறையாக ஏலத்தை ஒரு பெண் நடத்தவிருக்கிறார். இம்மாதிரியான ஏலத்தின் பொழுது Auctioneer அதாவது ஏலதாரரின் பங்கு மிகவும் முக்கியமானது. 2018- ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஹ்யூக் எட்மடஸ் என்பவர் ஐ. பி. எல். தொடரின் ஏலத்தை நடத்தி வந்தார். அதற்கு முன் ரிச்சர்ட் மேட்லி என்பவர் ஏலத்தை நடத்தி வந்தார். Homemade Skin Whitening Rose Cream: ரோஸ் க்ரீம்.. வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

ஐ.பி.எல் ஏலம் நடத்தும் முதல் பெண்: இம்முறை ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் (வயது 48) நடத்தவுள்ளார் என்று அறிவித்திருக்கின்றனர். இவர் 25 ஆண்டுகளாக ஏலதாரராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் அதிகமாக கலைப் பொருள்களை ஏலம் விடும் நிகழ்வுகளில் ஏலதாரராக பணியாற்றியிருக்கிறார். அதில் கொண்டிருக்கும் நீண்ட அனுபவத்தை வைத்தே விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலதாரராக மாறியுள்ளார். இவர் இந்த ஏலத்திற்காக 2 கோடியே 25 லட்ச ரூபாயை சம்பளமாக பெறுகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.