Skincare (Photo Credit: @Lluvia53208679 @JohnnyNoblebody X)

டிசம்பர் 19, சென்னை (Chennai): சரும அழகை மேம்படுத்த பல கிரீம்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் செயற்கையாக கலக்கப்படும் கெமிக்கல் ஏராளம். இதனால், நன்றாக இருக்கும் சருமம் கூட மோசமாகவிடுகிறது. எனவே, அவற்றை தடுக்க இனி வீட்டிலேயே இயற்கையான ஸ்கின் வைட்னிங் கிரீமை தயாரித்து பயன்படுத்தலாம். இது இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பதால், எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இதை உடல் முழுவதும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பன்னீர் ரோஸ் - 4 பூக்கள்

ரோஸ் வாட்டர் - 3 ஸ்பூன்

கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்

கிளிசரின் - 1 ஸ்பூன்

வைட்டமின் ஈ மாத்திரை - 2

பாதாம் எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்யத்தேவையான பொருட்கள்: முதலில் நாம் எடுத்துவைத்துள்ள பன்னீர் ரோஜாவின் இதழ்களை பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, கொஞ்சம் மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதில் 3 ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த விழுதை ஒரு வெள்ளை துணியில் கொட்டி நன்றாக பிழிந்து சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். Mari Selvaraj in Rescue Operations: சொந்த ஊருக்காக ஓடோடி உதவிய மாரி செல்வராஜ்: கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்.. உணரவேண்டியது என்ன?.!

இந்த சாறில், பாதாம் எண்ணெய், கற்றாழை ஜெல், கிளிசரின் மற்றும் 2 வைட்டமின் ஈ மாத்திரையில் இருக்கும் ஜெல் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கலக்க வேண்டும். இப்போது ஜெல் ரோஸ் கலரில் கிடைக்கும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களது ரோஸ் க்ரீம் தயார். இதனைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களது சருமம் ஜொலி ஜொலிப்பாக மாறும்.