
மார்ச் 17, துபாய் (World News): அமீரக நாடுகளில் முக்கிய ஒன்றாக இருப்பது துபாய் (Dubai). 3.79 மில்லியன் மக்கள் தொகையுடன், அமீரகத்தின் தலைநகராகவும் விளங்கும் துபாய், சர்வதேச அளவில் கவனிக்கப்படும் முக்கிய நாடுகளில் ஒன்றாகும். உலகளாவிய அரசியல், பிற செயல்பாடுகள், சுற்றுலா, பொழுதுபோக்கு என துபாயில் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில், உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையிலான புதிய கட்டுமானங்கள், வானுயர்ந்த கட்டிடங்கள் என துபாய் பல இலட்சம் வெளிநாடு வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பின் முக்கிய அங்கமாகவும் இருக்கிறது. அதேநேரத்தில், இஸ்லாமிய நாடுகளின் பட்டியலில் உள்ள துபாயில், முழுக்க முழுக்க எண்ணெய் கிணறு, சுற்றுலா போன்றவை பிரதான வருவாய் ஆதாரங்கள் ஆகும். இஸ்லாமிய சட்டத்தின் பெயரில் செயல்பட்டு வரும் துபாயில், ஒவ்வொரு குற்றத்திற்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். வழக்கு விஷயத்தில் சிக்கினால், விரைவில் துல்லிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் உறுதியாகும் பட்சத்தில் மரண தண்டனைகள் கூட வழங்கப்படும். Monkey Steals Smartphone: செல்போன் வேணுமா? ஜூஸ் கொடு.. குரங்கின் ஸ்மார்ட் டெக்னீக்.. வைரல் வீடியோ இதோ.!
அரைமணிநேரம் கடந்தும் அப்படியே இருந்த தங்கம்:
இதனிடையே, துபாயில் பெண் ஒருவர் கடந்த ஆண்டில் எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. துபாயை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் வைத்திருக்க, அங்கு கடைபிடிக்கப்படும் கடுமையான சட்டங்களும் காரணம் ஆகும். ஆதலால், அங்கு இருக்கும் மக்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் துபாயின் சட்டங்களை பின்பற்றி செயல்பட வேண்டும். அதன்படி, பெண் ஒருவர் விலையுயர்ந்த தங்க ஆபரணத்தை கழற்றி காரின் மீது வைத்து செல்கிறார். அப்போது, அவரின் தங்கத்தை ஒருவரும் கவனிக்கவும் இல்லை, பார்த்தவர்களும் கன்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.
அரைமணிநேரம் கடந்தும் பெண்ணின் நகையை ஏறெடுத்துக்கூட பார்க்காத மக்கள்:
How safe is Dubai?
Can someone take gold from there? pic.twitter.com/2U4Vc4rBWB
— March () March 17, 2025