Mitchell Starc IPL bid: அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்... வரலாறு படைத்த ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான மிட்செல் ஸ்டார்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
டிசம்பர் 19, துபாய் (Dubai): தற்போது 17வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 333 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸை கடும் போட்டிக்கு பிறகு 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. Guinea Oil Terminal Blast: கினியா எரிபொருள் கிடங்கு தீ விபத்து... 13 பேர் பரிதாப பலி..!
வரலாறு படைத்த ஸ்டார்க்: 16 வருட ஐபிஎல் வரலாற்றில் 20 கோடிகளுக்கு ஏலம் போன வீரர்களில் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த நிலையில், பாட் கம்மின்ஸ் ஏலம் போன அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸையே பின்னுக்கு தள்ளியுள்ளார். மேலும் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம்போன வீரர் என்ற பெருமையை மிட்சல் ஸ்டார்க் (Mitchell Starc) பெற்றுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ( Kolkata Knight Riders) இவரை ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.