அக்டோபர் 09, சிட்னி (Sports News): ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc BBL Return), வரும் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும், பிக் பாஷ் லீக் 15வது சீசனில் களமிறங்கவுள்ளார். 11 ஆண்டுகளுக்கு பிறகு, பிக் பாஷ் லீக் தொடரில், சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இந்த சீசன் டிசம்பர் 14 முதல் ஜனவரி 25 வரை நடைபெறவுள்ளது. India Women Vs South Africa Women: இந்தியா Vs தென்னாபிரிக்கா பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்று தென்னாபிரிக்க பௌலிங் தேர்வு.!
பிபிஎல் தொடர்:
மிட்செல் ஸ்டார்க் கடைசியாக 2014 சீசனில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் 10 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிபிஎல்லின் முதல் சீசனிலும் அவர் அணியின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். அதில், 6 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினார். 2012ஆம் ஆண்டு சிட்னி சிக்சர்ஸ் சாம்பியன்ஸ் லீக் வெற்றியிலும் ஸ்டார்க் முக்கிய பங்கு வகித்தார். போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக திகழ்ந்தார்.
கம்பேக் கொடுக்கும் மிட்செல் ஸ்டார்க்:
பிபிஎல் தொடரில் உள்ள ஒவ்வொரு அணிக்கும் 2 துணை இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இது ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களை குறைந்த எண்ணிக்கையில் ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கிறது. தற்போது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு பெற்றுவிட்டார். 11 ஆண்டுகளுக்கு பிறகு பிபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க் களமிறங்குவது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி சிக்சர்ஸ் அணி வெளியிட்ட பதிவு:
After 11 seasons, Mitch Starc is back in magenta 🩷
He’s expected to link up with the squad following the Ashes series 👀#BBL15 #expecttheunforgettable pic.twitter.com/c4Ore7FWzG
— Sydney Sixers (@SixersBBL) October 8, 2025