
மே 17, பெங்களூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று 58 வது ஆட்டம் சிறிய இடைவெளிக்கு பின்னர் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் (Bangalore Chinnaswamy Stadium) வைத்து தொடங்குகிறது. தர்மசாலாவில் டெல்லி - பஞ்சாப் அணிகள் இடையே நடந்த போட்டியின்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் மூண்ட பதற்ற சூழல் காரணமாக இந்திய நிலைகளை நோக்கி டிரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், டிரோன்கள் அனைத்தையும் இந்திய பாதுகாப்பு அமைப்பு வானிலே தகர்த்தது. மேற்படி அசம்பாவிதத்தை தவிர்க்க போட்டி அப்படியே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஐபிஎல் போட்டியின் அடுத்தடுத்த திட்டமிட்ட போட்டிகளும் ரத்து செய்து அறிவிக்கப்பட்டன. Rohit Sharma Stand at Wankhede: ரோஹித் சர்மா பெயரில் வான்கடேவில் இருக்கை அரங்கம் திறப்பு.!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Royal Challengers Bengaluru Vs Kolkata Knight Riders):
இந்நிலையில், எல்லையில் அமைதி திரும்பி இருக்கும் காரணத்தால், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் வழக்கம்போல தொடங்குகின்றன. அதன்படி, இன்று 58வது போட்டி நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. தொடர் வெற்றியுடன் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை பெறவேண்டும் என்ற முனைப்புடன் களத்தில் இருக்கும் பெங்களூர் சொந்த மண்ணில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி அடைந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துமா? என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.