TATA IPL 2025 (Photo Credit: @IPL X)

மே 13, சென்னை (Sports News): இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக 2025 ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மே 08ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் வரும் மே 17ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் (IPL 2025) தொடரின் 18வது சீசன் தொடங்கிய நிலையில், இதுவரை 59 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. Virat Kohli & Anushka Sharma: விராட் கோலியின் கனவு.. கணவரின் செயலால் உருகிப்போன மனைவி அனுஷ்கா சர்மா.!

ஐபிஎல் மீண்டும் தொடக்கம்:

சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ஏற்கனவே ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்று போட்டிகள் என மொத்தம் 17 ஆட்டங்கள் மட்டுமே நடத்தப்படவுள்ளது. பாதியில் ரத்தான பஞ்சாப்- டெல்லி இடையிலான லீக் ஆட்டம் மீண்டும் நடத்தப்படவுள்ளது. எஞ்சிய ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் ஆகிய 6 இடங்களில் நடைபெறுகிறது.

ஐபிஎல் 2025 புதிய அட்டவணை:

  • 17-05-25 (சனி): ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இடம்: பெங்களூரு) இரவு 7:30 மணி
  • 18-05-25 (ஞாயிறு): ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் (இடம்: ஜெய்ப்பூர்) பிற்பகல் 3:30 மணி
  • 18-05-25 (ஞாயிறு): டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் (இடம்: டெல்லி) இரவு 7:30 மணி
  • 19-05-25 (திங்கள்): லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (இடம்: லக்னோ) இரவு 7:30 மணி
  • 20-05-25 (செவ்வாய்): சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (இடம்: டெல்லி) இரவு 7:30 மணி
  • 21-05-25 (புதன்): மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் (இடம்: மும்பை) இரவு 7:30 மணி
  • 22-05-25 (வியாழன்): குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (இடம்: அகமதாபாத்) இரவு 7:30 மணி
  • 23-05-25 (வெள்ளி): ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (இடம்: பெங்களூரு) இரவு 7:30 மணி
  • 24-05-25 (சனி): பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் (இடம்: ஜெய்ப்பூர்) இரவு 7:30 மணி
  • 25-05-25 (ஞாயிறு): குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (இடம்: அகமதாபாத்) பிற்பகல் 3:30 மணி
  • 25-05-25 (ஞாயிறு): சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இடம்: டெல்லி) இரவு 7:30 மணி
  • 26-05-25 (திங்கள்): பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (இடம்: ஜெய்ப்பூர்) இரவு 7:30 மணி
  • 27-05-25 (செவ்வாய்): லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (இடம்: லக்னோ) இரவு 7:30 மணி

    ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்று:

  • 29-05-25 (வியாழன்): தகுதிச் சுற்று 1 (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்) இரவு 7:30 மணி
  • 30-05-25 (வெள்ளி): எலிமினேட்டர் (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்) இரவு 7:30 மணி
  • 01-06-25 (ஞாயிறு): தகுதிச் சுற்று 2 (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்) இரவு 7:30 மணி
  • 03-06-25 (செவ்வாய்): இறுதிப்போட்டி (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்) இரவு 7:30 மணி

ஐபிஎல் போட்டி மீண்டும் துவக்கம்: