Guinea Oil Terminal Blast (Photo Credit: @ReutersWorld X)

டிசம்பர் 19, கொனக்ரி (Conakry): கினியாவின் (Guinea) தலைநகரான கொனக்ரியில் உள்ள எரிபொருள் கிடங்கில், எரிபொருள் இறக்கிக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இதனால் அந்நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். 178 பேர் காயமடைந்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை நாடு நம்பியிருப்பதால்,  பெரிய விநியோகத் தடங்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தலைநகரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கான விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுக்க, எரிபொருள் தொடர்பான முக்கியத் தேவைகளை  கண்டறிந்து வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. Earthquake in China: சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!