
ஜூன் 12, லார்ட்ஸ் (Sports News): ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 (WTC Final 2025) இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் (SA Vs AUS) மோதுகின்றன. இதில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மூலம் நேரலையில் (WTC Final 2025 Live Streaming) பார்க்கலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். SA Vs AUS Day 1: 43 ரன்னுக்கு 4 விக்கெட்களை இழந்து தென்னாப்பிரிக்கா திணறல்.. ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு..!
தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா (South Africa Vs Australia):
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் அடித்தனர். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்கரம் 0, ரியன் ரிகில்டன் 16, வியான் முல்டர் 6, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 22 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 43 ரன்கள் அடித்துள்ளது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மிட்செல் ஸ்டார்க் சாதனை:
இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஐசிசி இறுதிப்போட்டியில், அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்தியாவின் முகமது சமியின் சாதனையை முறியடித்து, மிட்செல் ஸ்டார்க் முதலிடம் பிடித்துள்ளார். LKK Vs SMP: கோவை பவுலர்களை வெளுத்துவாங்கிய மதுரை பாந்தர்ஸ்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
ஐசிசி இறுதிப்போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள்:
- மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 6 இன்னிங்ஸ் 11 விக்கெட்கள்
- முகமது சமி (இந்தியா) - 6 இன்னிங்ஸ் 10 விக்கெட்கள்
- டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து) - 5 இன்னிங்ஸ் 8 விக்கெட்கள்
- ரவீந்திர ஜடேஜா (இந்தியா) - 10 இன்னிங்ஸ் 8 விக்கெட்கள்
- கைல் ஜேமிசன் (நியூசிலாந்து) - 3 இன்னிங்ஸ் 8 விக்கெட்கள்